+918042781678
Currently it only shows your basic business info. Start adding relevant business details such as description, images and products or services to gain your customers attention by using Boost 360 android app / iOS App / web portal.

நீண்ட நேரம் நின்றால் கால்களில் ரத்தம் தேங்கி, நரம்புகளில் அழுத்தம் அதிகரிக்கும். அதன் விளைவாக தோலில் இவ்வாறான மாற்றங்கள் தெரியும் வேரிகோஸ் எக்ஸீமா – அரிப்பு, சிவப்பு தோல் கருமை – குறிப்பாக குதிகால் பகுதியில் தோல் கடினமாகுதல் & வலி (Lipodermatosclerosis) வீனஸ் அல்சர் – குதிகாலின் அருகில் ஆறாத புண்கள் யாருக்கு வரலாம்? ஆசிரியர்கள் மருத்துவர்கள், நர்சுகள், மருத்துவ பணியாளர்கள் போக்குவரத்து காவலர்கள் கடை / ஷோரூம் பணியாளர்கள் பாதுகாப்பு ஊழியர்கள் தொழிற்சாலை & அசெம்ப்ளி லைன் பணியாளர்கள் ஹோட்டல் & சமையலறை பணியாளர்கள் நீண்ட நேரம் நின்று வேலை செய்வோருக்கான எளிய பாதுகாப்பு முறைகள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள் – 30–45 நிமிடத்திற்கு ஒருமுறை 2–3 நிமிடம் நடக்கவும் அல்லது அமரவும் கால் உயர்த்தி ஓய்வு – வேலை முடிந்ததும் 15–20 நிமிடம் இதய அளவுக்கு மேலாக கால்களை உயர்த்தி வையுங்கள் கம்பிரஷன் ஸ்டாக்கிங்ஸ் கால் பயிற்சிகள் – ankle movement, toe raises நின்றபடியே செய்யலாம் தோல் பராமரிப்பு – தினமும் மாய்ஸ்சரைசர் பயன்படுத்துங்கள் சரியான உடல் எடை – நரம்பு அழுத்தத்தை குறைக்கும் நீண்ட நேரம் தொடர்ந்து நின்றோ / அமர்ந்தோ இருக்க வேண்டாம் தோல் பிரச்சினையை மட்டும் சிகிச்சை செய்வது போதாது — அடிப்படை பிரச்சினையை சரி செய்யாவிட்டால் மீண்டும் மீண்டும் வரும். முன்கூட்டியே பரிசோதனை + சரியான பழக்கங்கள் + சிகிச்சை = ஆரோக்கியமான கால்கள் & தோல் கால்களில் அரிப்பு, கருமை, வலி அல்லது புண்கள் இருந்தால் அலட்சியம் செய்யாதீர்கள்.